Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
15 October 2026
காலி மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் "கடற்றொழில் சேவையின் பலம்" நடமாடும் சேவை ஒக்டோபர் 16 அன்று தொடந்துவையில்...

கடற்றெழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சும் கடற்றெழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் “கடற்றொழில் சேவையின் பலம்” என்ற தொனிப்பொருளில் நடமாடும் சேவை வேலைத்திட்டத்தின் மூலம், நீண்ட காலமாக நிலவி வந்த மீனவர்களின் பல பிரச்சினைகளுக்குத் தாமதமின்றித் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றெழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவையின் தொடக்கமாக, காலி மாவட்டத்துக்கான வேலைத்திட்டம் ஒக்டோபர் 16 ஆம் திகதி காலி, தொடந்துவை மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு தங்கள் பிரச்சினைகளுக்கு நேரடியாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு காலி மற்றும் அதனை அண்மித்த ஏனைய மாவட்டங்களின் மீனவர்களிடம் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொள்கிறார்.

இந்த நடமாடும் சேவையில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இணைந்துகொள்வதுடன், மீனவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தெளிவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள இதன்போது வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக, அந்த நேரத்திலேயே தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருப்பின், அவை தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்துத் தகவல்களையும் ஆவணப்படுத்தி, முன்னுரிமை அளித்துச் செயற்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

“கடற்றொழில் சேவையின் பலம்” வேலைத்திட்டத்தின் மூலம் மீனவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், மீனவர்களின் மேம்பாட்டுக்காகச் செயற்படுத்தப்படும் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல், அதிலிருந்து உச்சபட்சப் பயனைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்.

 

Latest News