2 July 2026
களுத்துறை மாவட்ட கடற்றொழில் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு: மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகளின் அபிவிருத்தியை விரைவுபடுத்துமாறு பிரதி அமைச்சர் ரத்ன கமகே உத்தரவு

கடற்றொழிலாளர் குடும்பங்களின் பெண்களுக்கு தொழில்சார் பயிற்சியும் மாற்று வேலைவாய்ப்புகளும்: சமூக அமைப்புகளை வலுப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

களுத்துறை மாவட்ட கடற்றொழில் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கான “மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்” இரண்டாவது அமர்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்  ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று (02) களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பானந்துறை, பேருவளை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி இறங்குதுறைகளுடன் (Landing Sites) தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை எவ்வித காலதாமதமுமின்றி விரைவுபடுத்துமாறு பிரதி அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். குறிப்பாக, மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளுக்காக இறங்குதுறைகளைச் சென்றடைவதற்குப் பயன்படுத்தும் வீதிகளைப் புனரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடற்றொழில் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என வலியுறுத்திய பிரதி அமைச்சர், குறிப்பாக ‘கடற்றொழிலாளர் மகளிர் சங்கங்களை’ மீண்டும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். கடற்றொழிலாளர் குடும்பங்களின் பெண்களுக்கு மாற்று வாழ்வாதாரத் தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில்முறைப் பயிற்சிகளை வழங்குவதற்கு, மேல் மாகாண கடற்றொழில் அமைச்சின் நிதிப் பங்களிப்புடன் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் அவர் இதன்போது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், பொதுச் சுகாதாரம் தொடர்பான ஒரு விசேட விடயத்தில் கவனம் செலுத்திய பிரதி அமைச்சர், மாவட்டத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் அல்லது செயலிழந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, அப்படகுகளை உடனடியாகச் சுத்தப்படுத்துவதற்கும் அல்லது அங்கிருந்து அகற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு துறைமுக முகாமைத்துவத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, சட்டத்தரணி நிலாந்தி கொட்டஹச்சி, களுத்துறை மாவட்டச் செயலாளர், பானந்துறை பிரதேச சபைத் தலைவர், கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர், இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி. கபில பமுணுஆரச்சி மற்றும் கடற்றொழில் திணைக்களம், NAQDA, NARA, சீநோர் (Cey-Nor), கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share

Latest News

களுத்துறை மாவட்ட கடற்றொழில் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு: மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகளின் அபிவிருத்தியை விரைவுபடுத்துமாறு பிரதி அமைச்சர் ரத்ன கமகே உத்தரவு
கடற்றொழில் தொழில்துறையை நவீனமயமாக்குவதற்கும் இளைஞர்களை வலுவூட்டுவதற்கும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் ஜெர்மனியின் DVV International நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் விசேட ஒப்பந்தம்
வடக்கு - கிழக்கு மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மேம்படுத்த உலக வங்கி ஆதரவு: ‘REVIVE 1’ திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வு செப்டம்பரில் ஆரம்பம்
வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
பலநாள் மீன்பிடியாளர்களுக்கான மீன் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்த முன்னறிவிப்பு சேவையை மேலும் துல்லியமாகவும் திறம்படவும் மாற்றுவதற்கு நடவடிக்கை!
காணாமல் போன ‘IDAY-A- 0122KMN’ மீன்பிடிப் படகைத் தேடுவதற்கு தெற்கு கடற்பரப்பிலுள்ள வர்த்தகக் கப்பல்களின் உதவியும் நாடப்படுகிறது : கடற்படை, விமானப்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் கூட்டு நடவடிக்கைகள் தொடர்கின்றன
1 2 3 16