28 June 2026
பலநாள் மீன்பிடியாளர்களுக்கான மீன் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்த முன்னறிவிப்பு சேவையை மேலும் துல்லியமாகவும் திறம்படவும் மாற்றுவதற்கு நடவடிக்கை!

நாரா (NARA) நிறுவனத்தினால் பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு தற்போது வழங்கப்படும் “மீன் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்த முன்னறிவிப்புகளை” மேலும் முறைப்படுத்துவது மற்றும் தரவுகளின் துல்லியத்தன்மையை அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சில் நடைபெற்றது.

 

இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையத்தின் (Indian National Centre for Ocean Information Services – INCOIS) உயர்மட்ட குழுவினருக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறையின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

இங்கு அவதானம் செலுத்தப்பட்ட முக்கிய விடயங்கள்:

 

✅ மீன்வள முன்னறிவிப்பு தரவுகளை மேலும் துல்லியமாகவும் (Accuracy) விரைவாகவும் மீனவர்களுக்கு வழங்குதல்.

✅ நவீன தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.

✅ இந்நாட்டு அதிகாரிகளுக்கான விசேட தொழில்நுட்ப பயிற்சி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

 

இந்த புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம், பலநாள் மீன்பிடியாளர்கள் மீன்கள் நடமாடும் வலயங்களை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்பதுடன், இதன் மூலம் எரிபொருள் செலவு மற்றும் நேரத்தை வீண்விரயமாக்காது அதிக மகசூலைப் பெற்றுக்கொள்வதற்கும், மீன் வளம் வீணாவதைக் குறைப்பதற்கும் பெரும் பக்கபலமாக அமையும்.

Share

Latest News

பலநாள் மீன்பிடியாளர்களுக்கான மீன் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்த முன்னறிவிப்பு சேவையை மேலும் துல்லியமாகவும் திறம்படவும் மாற்றுவதற்கு நடவடிக்கை!
காணாமல் போன ‘IDAY-A- 0122KMN’ மீன்பிடிப் படகைத் தேடுவதற்கு தெற்கு கடற்பரப்பிலுள்ள வர்த்தகக் கப்பல்களின் உதவியும் நாடப்படுகிறது : கடற்படை, விமானப்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் கூட்டு நடவடிக்கைகள் தொடர்கின்றன
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
நார்வேயின் மிகப்பெரிய கடல் உணவு நிறுவனம் இலங்கையின் மீன் பதப்படுத்தும் துறையுடன் இணைந்து செயற்பட ஆர்வம்
கொழும்பு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் : கரையோரப் பகுதிகளில் கைவிடப்பட்ட அரச கட்டடங்களை மீனவ சமூகத்தின் நன்மைகளுக்காக பயன்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை
1 2 3 16

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன