Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
15 October 2026
நுகர்வோருக்கு நிவாரணம் – வியாபாரிகளுக்குப் புதிய நம்பிக்கை!... பெலியகொடை மீன் சந்தையில் விலைகள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி...

இந்நாட்களில் பெலியகொடை பிரதான மீன் சந்தையின் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளன. அங்கு மீன் விலைகள் குறிப்பிடத்தக்க மட்டத்தில் குறைவடைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.

இந்தத் திடீர் விலை வீழ்ச்சி நுகர்வோருக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. சத்தான உணவு வேளையொன்றைத் தயாரித்துக்கொள்வதற்குத் தமக்குக் கிடைத்த பெரும் நிவாரணம் இது எனவும் அவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, நாளாந்தம் மீன் கொள்வனவு செய்ய வரும் நுகர்வோரின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

மறுபுறம், இந்த நிலைமை மீன் வியாபாரிகளுக்கும் புதிய நம்பிக்கையைச் சேர்த்துள்ளது. மீன் விலை குறைந்தமையால் நுகர்வோரின் ஈர்ப்பு அதிகரித்துள்ளதுடன், அதன் மூலம் தமது நாளாந்த விற்பனை அளவும் வருமானமும் வளர்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக சமூகத்தினர் கூறுகின்றனர்.

அதிக விலை காரணமாக முடங்கிப்போயிருந்த தமது வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் உயிர்பெற்றுள்ளதாகக் கூறும் அவர்கள், இந்த நியாயமான விலை மட்டம் தொடர்ந்தும் நிலைத்திருந்தால் தொழில்துறைக்கும் மக்களுக்கும் பெரும் நிவாரணமாக அமையும் எனச் சுட்டிக்காட்டுகின்றனர். ஒட்டுமொத்தமாக, இந்த விலை வீழ்ச்சி நுகர்வோருக்கும் மீன் வியாபாரிகளுக்கும் புதிய நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளதாக மக்களின் கருத்துகளிலிருந்து தெரிகிறது.