07 October 2026
மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வுகள்!
காலி மாவட்ட மீனவ சமூகம் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு துரிதகதியில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் விசேட நடமாடும் சேவையின் ஏற்பாடுகள் தொடர்பான இரண்டாவது கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (06) காலி மாவட்டச் செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தப் பொதுச் சேவைத் திட்டத்திற்காக சுமார் 50 அரச நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்படுவதுடன், இதன் ஊடாக காலி மாவட்ட மீனவ சமூகம், கடற்றொழில் நடவடிக்கைகள், வாழ்வாதார மேம்பாடு, சமூக நலன்புரி உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் நிறைவேற்றிக் கொள்வதற்கு வழிவகுக்கும்.
இக்கலந்துரையாடலுக்காக காலி மாவட்டச் செயலாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஹிக்கடுவ பிரதேச சபையின் உப தவிசாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழாம், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.









