Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
26 August 2026
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் வாழ்த்துச் செய்தி

அகிலத்திற்கு அருட்கொடையாகத் தோன்றி, மனித குலத்திற்கு நல்வழி காட்டிய புனித நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் (மீலாதுன் நபி) கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும், அவர் போதித்த உன்னத நெறிகளும் எக்காலத்திற்கும் ஏற்ற வழிகாட்டியாகும். குறிப்பாக சகோதரத்துவம், கருணை, ஈகை, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதையை அவர் உலகிற்கு வலியுறுத்தினார்.

நாம் அனைவரும் இன, மத வேறுபாடுகளைக் கடந்து அன்போடும் சமாதானத்தோடும் வாழ்வதே பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நாம் செலுத்தும் மிகச்சிறந்த கௌரவமாகும். குறிப்பாக, நாட்டின் கடற்றொழில் துறையிலும், பொருளாதார மேம்பாட்டிலும் முக்கிய பங்காற்றும் எமது முஸ்லிம் சகோதரர்களின் நலனிலும் வாழ்வாதார உயர்விலும் எமது அரசாங்கம் எப்போதும் உறுதியோடு செயற்படும்.

இந்த புனித நாளில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய நேரிய வழியில் பயணித்து, இலங்கையில் சமாதானமும், நல்லிணக்கமும், ஐக்கியமும் தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை வாழ் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

Latest News