Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
08 August 2026
மாத்தறை முதல் பொத்துவில் வரை மற்றும் சிலாபம் முதல் மன்னார் வரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் - கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (08.08.2026) முற்பகல் 08.30 மணிக்கு வெளியிடப்பட்ட பலத்த காற்று தொடர்பான அபாய எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைய, நாட்டைச் சூழவுள்ள சில கடல் பகுதிகளில் நிலவும் அதிகப்படியான கொந்தளிப்பான தன்மையைக் கருத்திற்கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அனைத்து மீனவ சமூகத்திற்கும் இந்த விசேட அறிவித்தலை விடுக்கின்றது.

குறித்த அறிவிப்பின்படி, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், சிலாபம் முதல் கல்பட்டி ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக இப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படலாம் என்பதால், கரையோர கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் அபாயகரமானதாகும்.

எனவே, மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும், சிலாபம் முதல் மன்னார் வரையிலும் உள்ள கடல் வலயங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், ஏனைய பகுதிகளிலிருந்து புறப்படும் கலன்கள் இந்த அபாயகரமான வலயங்களுக்குள் நுழைய வேண்டாம் எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவிக்கின்றது.

அத்துடன், வருங்கால வானிலை அறிவிப்புகள் குறித்துத் தீவிர அவதானம் செலுத்தி, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுமாறு அனைத்து மீனவ சமூகத்தையும் திணைக்களம் தயவுடன் கேட்டுக்கொள்கிறது.

Latest News