19 June 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்தார்.

இதன்போது முதலாம் கட்டமாக ரூபா 1.800 மில்லியன் பெறுமதியான 32 வலைகளும், ரூபா 8.640 மில்லியன் பெறுமதியான 18 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், தலா ரூபா 480,000.00 பெறுமதியான 18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 03 படகுகளும் ( நெடுந்தீவிற்கு 02 படகுகளும், காரைநகருக்கு 01 படகுகள்), முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 02 படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன், காரைநகர் பிரதேச செயலாளர் நிரஞ்சனா நவரத்தினம், காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை பணிப்பாளர் திரு.றோகன, சீ நோர் படகுதிருத்தும் நிறுவனத்தின் தலைவர் திரு. வசந்தமானபெரும, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. அகிலன், முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. சுதாகர், மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. ரமேஸ்கண்ணா, திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share

Latest News

புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை - கடற்றொழில் பணிப்பாளர் நாயகம்
🟥 Update 6.20 P.M.கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்கள் தெற்கு நோக்கி நகர்கின்றன: மீன்பிடிக் கலன்களுக்கு அவசர எச்சரிக்கை
சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கக் கடற்படை மற்றும் விமானப்படை கூட்டு நடவடிக்கை: தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை
கொழும்புக்கு மேற்கே கடற்பரப்பில் சரக்குக் கப்பலிலிருந்து 17 கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்துள்ளன: மீனவ சமூகத்திற்கு அவசர எச்சரிக்கை!
மேற்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்: யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரகப் படகுகள் கடலுக்குச் செல்ல தடை – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
நாட்டை சூழவுள்ள கடற்பரப்பு மிகக் கொந்தளிப்பாகக் காணப்படும்: மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் கடுமையான பாதுகாப்பு அறிவுறுத்தல்களும் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
1 2