01 August 2026
கொழும்புக்கு மேற்கே கடற்பரப்பில் சரக்குக் கப்பலிலிருந்து 17 கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்துள்ளன: மீனவ சமூகத்திற்கு அவசர எச்சரிக்கை!
கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 வெற்று கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விபத்து வட அகலரேகை 06° 54′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079° 32′ ஆகிய ஆள்கூறுகளுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த வெற்று கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கடற்கரைப் பகுதியை நோக்கி மிதந்து வரக்கூடிய சாத்தியம் அதிக உள்ளது.
எனவே, குறித்த கடற்பகுதிகளில் தொழில் மற்றும் பயணங்களில் ஈடுபடும் அனைத்து பலநாள் மற்றும் சிறிய ரக மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒருவேளை மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ (Radio Message Centre) அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Share



