இலங்கையின் கடற்றொழில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த நோர்வே அரசாங்கத்தின் AIS செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவி மற்றும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகள்

இலங்கையின் கடற்றொழில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த நோர்வே அரசாங்கத்தின் AIS செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவி மற்றும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகள் நோர்வே நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், நோர்வேயின் வர்த்தகம், கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (23) ஒஸ்லோ நகரில் விசேட கலந்துரையாடல்களை நடத்தினர். இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வது குறித்து அமைச்சர் இதன்போது விசேட கவனம் செலுத்தினார். […]



