சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அமைச்சின் விசேட அறிவிப்பு

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அமைச்சின் விசேட அறிவிப்பு உலகில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் எக்காரணம் கொண்டும் சட்டவிரோத பயண வழிகளைப் பயன்படுத்தவோ அல்லது அறிமுகமில்லாத வலயங்களுக்குள் நுழைவதையோ தவிர்க்குமாறு வலியுறுத்தினார். […]


